ஒவ்வொரு நாளும்
மேற்கிலும் வரும் சூரியன்.
வடதுருவத்தின் குளிருக்கு
தென்துருவம்
குறைந்ததில்லை.
தென்மேற்கு பருவமழை
பொய்த்துப் போனதால்
வடகிழக்கு பருவத்தை
நம்புகின்றன
வயல்வெளிகள்.
திசைமாறிய
பாய்மரத்தால்தான்
அமெரிக்கா அகப்பட்டது
கொலம்பசுக்கு.
- கோவி. லெனின்