குளித்து
உடுத்து
வணங்கி
பார்த்து
உண்டு
சென்று
அறிந்து
புரிந்து
தெளிந்து
திரும்பி
அருந்தி
தொழுது
மகிழ்ந்து
உணர்ந்து
முடித்து
உண்டு
உறங்கி
எழுந்து...
பேடியாய்...
அடுத்தடுத்து
அநியாயமாய்க் கழித்த
வாழ்வை மறந்து
வறட்சிகள் மறைய
வளர்ச்சிகள் ஓங்க
வாழ்த்துக்கள் நிறைய
என்னுள் நீ வந்து
ஏகாந்தமாய் உலவிடு
என்னில் பரவிடு
என்றென்றும் ஒளிகொடு
தமிழே! என் காதலே!
- மகேத்ரா