கீற்றில் தேட...


Man in bedநீண்ட நாட்களாக
நிற்க காத்திருக்கிறது துடிப்பு.
அருகில் செல்லாமல்
நாடி பார்க்காமல்
நாள் குறிக்கப்பட்டிருக்கிறது
அவரவர் ஞானத்திற்கேற்ப

உள்ளிருக்கும் கறைகள்
சமனாகும்
நம்பிக்கை தந்தது
காதில் விழுந்த
என்
மரணத்தின் பலன்கள்.

முத்துக்குமரன், துபாய் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.