
வழித்தென்னை இழுத்திடும்,
நீளமான அகலமான தேகம்
அதில் இருக்கும்போதெல்லாம்
எத்தனை சுகம்!
தினமும் நீ என்னோடும்
நான் உன்னோடும் தான்
இருக்கிறோம்- இணைந்தே
ஊர்சுற்றி வருகிறோம்!
நான் மெல்ல தொடும்போதும்
எட்டி உதைக்கும்போதும்
கோபப்பட்டதில்லை-ஒருபோதும்
வேகப்பட்டதில்லை.
என்னோடு மழையில் நனைந்திடுவாய்
வெய்யலில் உலர்ந்திடுவாய்,
நான் உன்னை துடைத்துவிட்டதுமில்லை
எவரையும் தொடவிட்டதுமில்லை!
என் மனைவியைவிட நீ
எனக்கு நேசமானவள்,
அவளை முதன்முதலில் நான்
பார்க்க போனபோது கூட
நீயும் என்னோடுதான் வந்தாய்!
அவளுக்கும் உன்னை இஷ்டம்
நீ இல்லையென்றால்
அவளுக்கு தான் கஷ்டம்!
மழையும் பாராது
வெய்யலும் பாராது
இரவு பகலாய் எனக்காக
உழைத்த உனக்காக இந்த
மலர் மாலையையிடுகிறேன்,
ஏன் தெரியுமா?
என் ஆசை மோட்டார் பைக்கே,
இன்று ஆயுதபூஜையாம்.
- ராஜ், துபாய்