என்றுமில்லாத
மயான அமைதி
வீதியெங்கும் பரவியிருக்கும்.
நம்பிக்கையில்லாத நிலையில்
நாடுமுழுவதும்
எந்தக்கணத்திலும்
இருண்டுபோகலாம் என்ற
அச்சத்தோடு மௌனித்துப்போகும்.
அதி உயர்பாதுகாப்பு வலயத்தில்
இன்னும்...
இராணுவப் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டிருக்கும்.
அரச மாளிகைகளில்
பாராளுமன்ற வளாகத்தில்
விமான நிலையத்தில்
பொருளாதார நிலையங்களில்
பொது இடங்களில்
மக்கள் நடமாட்டம் இல்லாமல்
இராணுவ நடமாட்டம் அதிகரிக்கும்.
அவர்களின்...
சந்தேகத்துக்குரிய நபர்களாக
எதுவுமறியாத...
எங்கள் சகோதரர்களே
வழமைபோல
கைதுசெய்யப்படுவார்கள்.
அரச தொலைக்காட்சி
வானொலி
பத்திரிகைகளில்
இன்று...
மக்கள் வீதிகளில்
நடமாடவேண்டாம்
என அறிவிக்கப்படும்
சொந்தநாட்டுக் குடிமக்கள்
நடமாடக்கூட
சுதந்திரமில்லாத
அந்த நாள்தான்
அவர்களின்...
சுதந்திர தினம்...!!!
- த.சரீஷ், பாரீஸ் (