மௌனங்கள்
நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தன
வீட்டின் வாசலில்
உள்ளே கிடத்தப்பட்ட
பூத உடலில் மலர்மாலைகள்
கட்டியழுது கொண்டிருக்கையில்
பின்வாசலில்
எப்பொழுதும் கேட்கும்
பாக்கு உரலின் ஓசையை
இழந்த துக்கத்தில்
சுரத்தையற்று உதிர்ந்துகொண்டிருந்தன
வேப்பம்பூக்கள்
சலனமற்ற கிணற்று நீரில்.
- ஆ.மீ. ஜவஹர் (