நான் உளிகள் உருவாக்கிய
காயங்களின் அழகான
தழும்பு...
வலிகளை இன்னும் தழும்புகள்
நினைவில் கொண்டிருப்பது பற்றி
காயங்களுக்கு என்ன கவலை...
என்னையன்றி வலிகளால் மட்டும்
என்னாகிவிடப்போகிறது...
நானிருப்பது எங்கு பிடித்தமில்லையோ
அங்கு தொடங்குகிறது போராட்டத்தின்
முதல் படி...
- ராம்ப்ரசாத், சென்னை (