கீற்றில் தேட...

நம் இனம் இனி விண்ணுலகத்தையும்

ஆட்சிபுரியும்! நிலவிலும் தடம் பதிக்கும்!

தொப்பை வயிறு குழுங்க

முழங்கினார் கட்சித் தலைவர்.

 

அரசியல் விளம்பரம் செய்ய

இனி வீதிகளில் வெள்ளையடித்த

காலி சுவர்கள் இல்லை.

வானவீதியில் வெள்ளையாய்

தெரிந்தது பெளர்னமி நிலவு.

-     மால்கம் X இராசகம்பீரத்தான் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)