
புதைத்தபடி அழுகுரலோடு
பயணிக்கும் வாழ்க்கை
இருக்கின்றதை தேடிக்கொண்டு
இல்லாததை எதிர்பார்த்தும்
பொல்லாப்புகளுக்குள்
உயிர்களின் அசைவு
எங்கோ தொடங்கி
எங்கோ முடிக்கவென
அழைத்துச் செல்லும் மரணம்
இன்னும் முடிவுபெறாமல்
தொடர்கிறது
கண்முன்
தோன்றி மறையும்
புரிதலில்லா வாழ்க்கையின்
பக்கங்கள்
தொலைவில் தெரியும்
வேண்டப்படும்
வாழ்க்கையின் தோன்றல்கள்
அரவணைத்துக்
கொள்ளமுடியாத சில
கரங்களின்
அழுகைகள்
ஆசைகளைத் துறந்தும்
மறந்தும்
விடாது எம்மை பற்றிக்கொள்ளும்
ஆசைகள்
எல்லாம் சேர்ந்து
துன்பப்படுத்த நடக்கிறோம்
வேதனைகளைச் சுமந்தபடி
வேதனைகளைப் பற்றிக் கொண்டபடி
இன்னொரு
வேதனைக் களத்தை
நோக்கி
அமைதியற்றவர்களாக
நாம்.
- கீ.பீ.நிதுன், முல்லைத்தீவு, இலங்கை (