நினைவின் அடுக்குகளில்
மடிப்பு கலையாமல்
ஏறிச் செல்கிறாய்..
உன் பாதம்
பட்ட இடங்களில்
பூத்துக் கிடக்கிறதென்
பெண்மை...
---------------
என் இதய பலூனில்
நிரம்பி வழியும் காதல்
உன் ஒற்றைச் சொல்லில்
வெடித்துச் சிதறி
பிரபஞ்சத்தை நிரப்ப
பலூனாகிறது
பிரபஞ்சமும்..
------------------
இலையோடு
மழை பேசும் ரகசியமாய்
என் அலைபேசியோடு
உன் குறுஞ்செய்தி..
- இவள் பாரதி (