சுவர் ஆணியில்
தொங்கவிடப்பட்ட
சட்டையிலும் ...
மெத்தை மேல்
உறங்கி கொண்டு
இருக்கும் தலையணையின்
மேல் உறையிலும்....
கடைசியாக எழுதப்பட்ட
உறவினரின் விலாசம்
அடங்கிய பதிவு ஏடுவிலும்...
இருக்கையின்
கை பகுதிலும்
சாய் நாற்காலியின்
தலை பகுதிலும்...
அப்பாவின் வாசம்
எஞ்சி இருந்தது..
அவரின் சுவாசம்
மறைந்த பின்பும்....
- மணி ராமலிங்கம் (