கீற்றில் தேட...

எல்லோருக்குமான
ரகசியங்களில் ஒன்றாகவே இருக்கிறது
தனது பெயரோடு
தான் நேசிப்பவரின் பெயரை
முன் பின் சேர்த்துக் கொள்வதும்
அதனூடான குறியீடுகளை
கடவுச் சொல்லாக வைத்திருப்பதும்..
--------------------------------
உனதழைப்பிற்காக
காத்திருந்த பொழுதுகளில்
இரவு துணையிருந்தது..
நீயழைத்தவுடன்
அணைத்துக் கொள்ள
இரவு தன் கண்களை மூடியிருந்தது..
மெல்ல என் கண்கள் மூடுகையில்
சன்னல் கம்பிகளின் வழியே
வெளிச்சப்புள்ளிகள்
தூரத்தில் வருவது தெரிந்தது..
-------------------------------
உன் பாராட்டையோ
கேள்வியையோ
சுமந்து வரும்
உன் குறுஞ்செய்திகள்
மாற்றிவிடுகிறது
எனது முந்தைய மனநிலையை..
------------------------
விரும்பியோ
விரும்பாமலோ
எங்கேயேனும்
நிகழ்ந்தபடிதானிருக்கிறது
ஒரு காதல் பூப்பதும், உதிர்வதும்.

- இசை ப்ரியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)