மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில மாநாடு 2012 மார்ச் 24, 25 தேதிகளில்
இடம் - K.G. கண்ணபிரான் அரங்கு, தியான ஆசிரமம், 25, மாதா சர்ச் சாலை, புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில், சாந்தோம் பஸ் நிலையம் அருகில், சென்னை-28. தொ.பே: 044-24952210.
(எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 27D, S27D/ சென்ட்ரலில் இருந்து L32A, L6A/ கோயம்பேட்டில் (மார்க்கெட்) இருந்து 12BET பேருந்துகள் மூலம் சாந்தோம்/பட்டினப்பாக்கம் பஸ் நிலையத்தில் இறங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை ஒட்டிய சாலையில் நடந்தால், தியான ஆசிரமத்தை அடையலாம்.)
மக்கள் சிவில் உரிமைக்கழகம் கடந்த 1976-ம் ஆண்டு விடுதலைப்போராட்ட வீரர் திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களால் தொடங்கபட்டது. நம் நாட்டின் ஜனநாயக உரிமைகள் நெருக்கடி நிலை என்ற பெயரில் மறைந்த பிரதமர் இந்திராகாந்தியால் மிகப்பெரும் பாதிப்புக்குள்ளான போது, அதனை எதிர்த்துப் போராட மக்களின் ஜனநாயக தளம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கத்தின் துவக்கமாகவே மக்கள் சிவில் உரிமைக்கழகம் துவக்கப்பட்டது. நம் சமூகத்தின் பல்வேறு அறிவுஜீவிகள், ஜனநாயகத்தை நேசித்த வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பல்வேறு ஆளுமைகள் பங்கெடுத்து ஜனநாயகத்தைப் பாதுகாக்க குரல் கொடுத்துவரும் அமைப்பாக செயல்படுகிறது. மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகப் போராட்டத்தில் கள செயல்பாட்டாளர்கள் அடக்குமுறையான சிறை, வழக்கு உள்ளிட்ட பல்வேறு இடர்களை எதிர்கொண்டு தங்களின் சிவில் வீரத்தை நிறுவி வருகின்றனர். நாடறிந்த குழந்தைகள் மருத்துவர் பினாயக் சென் சட்டீஸ்கரில் பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைக்காக குரல் கொடுத்ததால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறைப்பட்டார். அவர் இவ்வியக்கத்தின் தேசிய துணைத் தலைவர்களில் ஒருவர். மறைந்த நீதிபதி.தார்குண்டே, வழக்குரைஞர்,கே.ஜி.கண்ணபிரான், சுரேந்திரமோகன், ரஜினி கோத்தாரி, ஓய்.பி.சிப்பர் போன்ற தலைவர்கள் வழி நடத்திய இயக்கம் இதுவாகும்.
அரச வன்முறைகள் எங்கெல்லாம் ஜனநாயகத்தைக் கூறு போட முயல்கிறேதோ அங்கெல்லாம் இவ்வியக்கம் தன்னுடைய ஜனநாயகக் குரலை ஓங்கி ஒலித்து வருகிறது. தன்னலமற்ற செயல்பாடுகளினால் நமது வரலாறு முழுவதும் மனித உரிமைக்கான குரலை எதிரொலித்தும் வருகிறது.
சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள், ஏழைகள், பழங்குடிகள், காவல் வன்முறைக்கு ஆளானோர் என அதிகாரத்துவம் அணுகாத மக்களின் உரிமைகளை நிறுவ இவ்வியக்கம் முயன்று வருகிறது. மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள் என்ற அரசியல் கோட்பாடுகளைத் தாங்கி ஒரு மக்கள் இயக்கமாக, பிற நிதி பெறும் இயக்கங்களைச் சாராது, தன் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் நன்கொடை மூலமாகவே இது எழுந்து நிற்கிறது.
இவ்வியக்கத்தின் மாநில மாநாடு 2012 மார்ச் 24, 25-ம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. மக்களின் ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கும் இந்த இயக்கத்தை ஆதரிக்க வேண்டியது சமூக ஆர்வலர்களின் கடமையாகும். தாங்கள் இந்த இயக்கத்தில் இணைந்தும், நிதி கொடுத்தும் இதன் செயல்பாடுகளில் பங்கெடுத்தும், ஜனநாயகப் பண்பை வெளிப்படுத்த வேண்டப்படுகிறீர்கள்.
அனைவரும் அவசியம் பங்களீப்பீர்..
24 மார்ச்-2012
நேரம் |
நிகழ்ச்சி |
மாநாடு துவக்க நிகழ்ச்சி |
|
10.31-10.40 |
வரவேற்புரை: பேரா.சரஸ்வதி |
10.41-10.55 |
தலைப்பு அறிமுக உரை: C.R. பிஜய் |
10.56-11.10 |
தலைமையுரை: ச.பாலமுருகன் |
11.11-11.25 |
சிறப்புரை: Kavita Srivatsava, National Secretary, PUCL |
11.26-11.40 |
தோழமையுரை: P A Pouran, Gen.Secretary, PUCL-Kerala & P.B. D’Sa, President, PUCL-Karnataka |
25 மார்ச்-2012
முல்லைப் பெரியாறும், தண்ணீர் பகிர்வும் |
|
09.00-10.30 |
தலைமை: கிருஷ்ணன் பேச்சாளர்கள்: P A Pouran, Gen.Secretary, PUCL-Kerala, விடுதலை ராஜேந்திரன் & லஜபதிராய் விவாதம்: 20 நிமிடங்கள் |
10.31-10.45 |
தேநீர் இடைவேளை |
ஈழத்தமிழர் வாழ்வுரிமை |
|
10.46-12.45 |
தலைமை: கண. குறிஞ்சி பேச்சாளர்கள்: வட இலங்கையில் தமிழர் நிலை: சுமந்திரன், MP, TNA LLRC&UNHRC:முன்செல்வது எப்படி?: முனை. வீ. சுரேஷ், National Secretary, PUCL விவாதம்: 20 நிமிடங்கள் |
12.46-01.30 |
உணவு இடைவேளை |
அணுசக்தியும், மக்கள் உரிமையும் |
|
01.31-03.00 |
தலைமை: TSS மணி பேச்சாளர்கள்: ஸ்ரீதர், முன்னாள் விஞ்ஞானி, DAE, ஆண்டன் கோமஸ், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் கூட்டமைப்பு, முனை. SP உதயகுமார், PMANE & மருR..ரமேஷ், PUCL-கோவை விவாதம்: 20 நிமிடங்கள் |
|
|
பொதுக் கூட்டம்: ‘சட்டமின்மையும், அரசின் தப்பிக்கும் போக்கும்: மிதிபடும் ஜனநாயகமும், மனித உரிமைகளும்’ (State Lawlessness and Impunity - Threat to Democracy and Human Rights) இடம்: பி.எட் அரங்கம்-லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை-34 |
|
05.30-09.00 |
தலைமை: ச. பாலமுருகன்/ வரவேற்புரை: சுதா ராமலிங்கம் பேச்சாளர்கள்: இலங்கையில் ஜனநாயகத்தை மீட்டெடுத்தல்: சுமந்திரன், MP, TNA சட்டமின்மையும், சிறுபான்மையினரும்: SIMI, பிற அமைப்புகளை குறிவைத்தல்: Kavita Srivatsava, National Secretary, PUCL இலங்கையும், கூடங்குளமும்-எதேச்சதிகார நடுவண் அரசின் கோர முகமா?: பேரா. ஜவாஹிருல்லா, MLA தேசத்துரோகமும், கூடங்குளம் போராட்டமும்: முனை. வீ. சுரேஷ், National Secretary, PUCL |
தொடர்புக்கு முனை. வீ.சுரேஷ், தலைவர்: 94442-31497 / சென்னை அமைப்பாளர்கள்: TSS மணி: 94449-05151 & க. சரவணன்: 97512-37734 |