பால் புகட்டும் அம்மாவுக்குள்ளிருந்து
பதறியெழும் பெண்ணொருத்தி
மாராப்பை கவனமாய் திருத்திய பின்
தண்ணீரை மட்டுமே துவட்டவல்ல
டவல் கொடுத்து விரட்டும் போதிருந்து
தாளிட்டுக்கொண்டு குளிக்கத் தொடங்குகிறான்
அதுவரை மகனாயிருந்த ஆண்
நறுமணம் கரைந்தோடும் சோப்புநுரைக்குள்
உரையாடலற்று விரைத்துக் கிடக்கின்றனர்
தாயும் மகனும்.
- ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )