பிடல் காஸ்ட்ரோவைப் பற்றி
விலை ரூ.10

"அலுவலகங்களில் முடங்கிக் கிடக்கும் சுபாவம் உடையவர் அல்ல பிடல். பிரச்சனைகள் இருக்கும் இடங்களில் எல்லாம் தீர்வு காண்பதற்கு அங்கு தோன்றிடுவார், தனது ஒற்றை வாகனத்தில். அவர் பயன்படுத்தும் வாகனத்தை மோட்டார் சைக்கிள்களின் அணிவகுப்போ அல்லது மிகுந்த ஒலி எழுப்பும் வாகனங்களோ என்றும் பின் தொடர்ந்தது இல்லை அது எந்தப் பொழுதாக இருந்தாலும் சரி, அதிகாலையோ அல்லது புழுதி ஏறிய வெயிலின் உக்கிரத்திலோ, இந்த வாகனம் தனித்தே பயணிக்கும். இந்த எளிய குணம் தான் அவரை அசாதாரண உச்சங்களை நோக்கி உயர்த்திச் சென்றுள்ளது. ''
ஆசிரியர்: கேபிரியேல் கார்சியா மார்க்வஸ். வெளியீடு: வாசல் வெளியீட்டகம்
40 டி/4, முதல் தெரு, வசந்தா நகர், மதுரை 625 003
பக்கங்கள் : 32
பழங்குடியினர்
கதை கவிதை கட்டுரைகள்
விலை ரூ.30
"தமிழகப் பழங்குடியினரைக் குறித்து புரிந்து கொள்ளுதலுக்கான முகாந்திரமாக இச்சிறிய புத்தகம் வெளிவருவது, பழங்குடி இன மக்களின் பண்பாட்டு, கலாச்சார முன்னேற்றத்தினை முன்னறிவிப்பதாக மட்டுமின்றி தங்களைக் குறித்த புரிந்து கொள்ளுதலை நோக்கி நகர்ந்துள்ளனர் என்பதும் ஒரு புறம் இருக்க, தன் முறையாக அவர்களின் வாழ்நிலைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.''
தொகுப்பாசிரியர் : விழி.பா. இதயவேந்தன்
வெளியீடு: பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்,
7, பாரதிதாசன் நகர், கல்லூரி சாலை, திண்டிவனம் 604 001
பக்கங்கள் : 112
ஏலேய்! கவிதைத் தொகுப்பு
விலை ரூ.40
"பாம்பு புடுங்குனாலும் பத்தியம் பாக்காம... தேளு கொட்டுனாலும் தேச்சிவுட்டுட்டு... பாடுபட்டு பாடுபட்டு உங்க பட்டா சாலையில கொண்டுவந்து கொட்டக் கொட்ட... அவுச்சி ஆவாட்டியாக்கிக் குந்தாணியில போட்டு குத்திக்குத்திக் கொடுத்தா... பொடச்சிக் கொடுக்கச் சொல்லி படைக்கிறமாதிரி பாவன காட்டிபுட்டு.. பருப்பும் நெய்யுமா போட்டு நல்லா மூக்கப்புடிக்க முழுங்கிட்டு... அதக்கி அதக்கிக் குசுவ விட்டுகிட்டே நீங்க எழுதனததானடா இலக்கியங் கிலக்கியம்னுட்டு எகிறிக் குதிக்கிறிங்க. எங்ககிட்ட இல்லாத இலக்கியமாடா உங்ககிட்ட... மாருலருந்து பாலு சுரக்கற மாதி மனசிலேருந்து பாட்டு சுரக்கற பரம்பரடா எங்களது.''
ஆசிரியர் : வே. ராமசாமி வெளியீடு : மதிநிலையம்,
4(39), தணிகாசலம் சாலை, பிருந்தாவன் அடுக்ககம், தியாகராயர் நகர், சென்னை - 17
பக்கங்கள் : 96
நமது சுதந்திரத்திற்கு என்ன வழி?
விலை ரூ.30
"உங்கள் அனைவருக்கும் நான் ஒன்றைத் தெளிவுபடச் சொல்ல விரும்புகிறேன். மதம் என்பது மனிதனுக்காகவே அன்றி மனிதன் மதத்துக்காக அன்று. நீங்கள் மனிதர்களாய் நடத்தப்படுவதற்கு முதலில் மதம் மாறுங்கள். ஒன்றுபடுவதற்காக மதம் மாறுங்கள். பலம் வாய்ந்தவர்களாய் விளங்க மதம் மாறுங்கள். சமத்துவத்தைப் பெற மதம் மாறுங்கள். விடுதலையைப் பெற மதம் மாறுங்கள். மதம் மாறுவதால் உங்களுடைய இல்லற வாழ்வு மகிழ்ச்சியானதாய் அமையும். உங்களை மனிதர்களாய் நடத்தாத இந்து மதத்தில் நீங்கள் ஏன் இருக்கின்றீர்கள்?''
ஆசிரியர் : டாக்டர் அம்பேத்கர்
வெளியீடு : தென்னாட்டு அம்பேத்கர் தளபதி எம். கிருஷ்ணசாமி சமூக விடுதலைக் கல்வி அறக்கட்டளை,
பள்ளிகொண்டா 635 809 பக்கங்கள் : 52
மனிதம்
விலை ரூ.10
"ஒவ்வொரு கவிதையும் கதையும் நாடகம் பத்திரிகை செய்தியும் ஓர் அரசியலை நடத்துகின்றன. பெரும்பாலும் இவை செய்யும் அரசியல் சமூகத்தின் பெரும் பகுதி, மக்களுக்கு விரோதமாக உள்ளது. எனவே, இவற்றை விமர்சிப்பது, விவாதத்திற்கு உட்படுத்துவது காலத்தின் தேவை என உணர்ந்து, தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இதையே மய்யப் பொருளாகக் கொண்டு கருத்தரங்கம் நடத்தியது. கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகள் நம்மைச் சிந்திக்கத் தூண்டும்; விவாதிக்கச் செய்யும், விமர்சிக்க வைக்கும்.''
தொகுப்பாசிரியர்: பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
வெளியீடு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்,
26, வெங்கடாசல (நாயக்கன்) 3 ஆவது சந்து, திருவல்லிக்கேணி, சென்னை - 5 பக்கங்கள்: 120
அனுபவ சித்த மருத்துவர்கள் சங்கம்
மாநாட்டு மலர் - 2005
விலை ரூ.50
“சித்தர்கள் பெரும்பாலும் மறைந்து வாழ்ந்தனர். தமிழ் மக்களுக்குப் பயன்படும் விதத்தில் இருந்த சுவடிகள் அனைத்தும் காலத்தால் அழிந்து போயின. மீதியுள்ளவை போகி நெருப்பில் போட்டு எரிக்கப்பட்டன. எஞ்சியவை ஆற்றில் கொட்டி அழிக்கப்பட்டன. பழைய பொருட்களைக் கட்டாயம் எரித்தாக வேண்டும் என்றும், இல்லாவிடில் ‘சுவர்க்கத்தில்' இடம் கிடைக்காது என்றும் நயவஞ்சகமாகக் கற்பிக்கப்பட்டதை நம்பிய தமிழர்கள் தங்கள் அறிவியலைத் தாங்களே அழித்தனர். எஞ்சியவை பெயர்த்தெடுக்கப்பட்டபோது, அவை சமஸ்கிருதத்திலேயே எழுதப்பட்டன.''
வெளியீடு: நம்பகம், 61/58, பனந்தோப்புத் தெரு, மயிலாடுதுறை - 609 003 பக்கங்கள் : 192