
பச்சை பசேலென காடு
வானுயர்ந்த மலைகள்
ஆங்காங்கே புத்த சிலைகள்,
எல்லாம் இருந்தது
எங்கும் இருந்தது
இனிமை எங்கள் வாழ்வை நிறைத்தது.
முந்திரி விளைந்தது
மிளகு விளைந்தது - ஏன்
எங்கள் பெண்களின் கூந்தலில்
ஏலமும் மணத்தது.
என்ன கெட்டதோ
எவர் கண் பட்டதோ?
தமிழ்தேன் கூட்டிலே
கல்லொன்று பட்டது.
சிறுநரியாம் சிங்களத்தான்
சீற்றம் கொண்டே சிதைத்துவிட்டான்.
பொன்னிழந்தோம் பொருளிழந்தோம்
பெண்கள் தம் கற்பையும்
தான் இழந்தோம்.
கையிழந்தோம் காலிழந்தோம்
கட்டியவேட்டியும் தானிழந்தோம்
ம்ண்ணிழந்தோம் மனையிழந்தோம்
கொண்டகுடி கூரையும்
தானிழந்தோம்.
அடிமை வாழ்வு போதுமென
இளைஞர் கூட்டம் பொங்கிற்று
ஆளாளுக்கு வீரரென
ஆயுதம் தான் தூக்கிற்று,
திறமை கடலில் போராடி
அகிம்சையாலும் வாதாடி
கண்டிடுவோம் - ஈழமே
அதுவே எங்கள் வீரமே,
ஒருநாளும் வாராதோ
எமது வாழ்வு சிறக்க
வந்தபின் வாழ்ந்திடுவோம்,
ஈழத்தில் தமிழன்
கொடி பறக்க.
- ராஜ், துபாய்