கீற்றில் தேட...

தேவையான பொருட்கள்:

குடைமிளகாய் - 3 
தனியா - 1 தேக்கரண்டி
வேர்க்கடலை - 3 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
கருவேப்பிலை - 1/4 கப்
சோறு - 2 கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எண்ணெய் இல்லாமல் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், தனியா, வேர்க்கடலையை வறுத்து எடுக்க வேண்டும். கருவேப்பிலை, கரம் மசாலா சேர்த்து கலந்து வைக்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் வெட்டிய குடைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்பு உப்பு மற்றும் மசாலா பொடி சேர்க்க வேண்டும். குடைமிளகாய் முக்கால் பாகம் வெந்ததும் இறக்கி சோறுடன் கலந்து பரிமாற வேண்டும். தயிர் வெங்காயம் கூட இருந்தால் சுவையாக இருக்கும்.