நேர்மையான, ஊழலற்ற, கண்ணியமான தேர்தல் நடப்பதற்கு தேர்தல் ஆணையம் முயன்று வருகிறது. இத்தேர்தலைக் கண்ணியமாக நடத்த குடிமக்களாகிய நமக்கு கடமையும் பொறுப்பும் உள்ளது. வெறும் வாக்குகளை அளித்து விட்டு எத்தனை காலம்தான் மௌனம் காக்கப் போகிறோம்?
தேர்தல் ஆணையத்தின் தேர்தல் வழிகாட்டுதல்கள், கட்டுப்பாடுகள் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை நாம் கண்காணிக்க வேண்டும். நமது வாக்குகளை விற்றுவிட வேண்டாம். விலைபேசும் வேட்பாளர்களை எச்சரிப்போம். அவர்களை உரியோருக்குத் தெரியப்படுத்துவோம். ஜனநாயகத்தைச் சீர்படுத்தி அடுத்த தலைமுறையின் பாதுகாப்பான வாழ்வுக்கு வழிவகுப்போம். ஜனநாயகம் மலர நாமும் நமக்கான ஜனநாயகக் கடமைகளை ஆற்றுவது அவசரமும் அவசியமும் ஆகும்.
வருகின்ற தேர்தலில் நாம் கண்காணிக்க வேண்டியவை:
• அனைத்து ஊழல் நடவடிக்கைகளையும் கண்காணிப்பீர்
• பொதுக் கூட்டங்கள் / ஊர்வலங்கள் பொது மக்களுக்கு இடையூறு இன்றி நடக்கின்றதா?
• அரசு வாகனங்களைத் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்துகின்றார்களா?
• எந்த வகையிலாவது வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்படுகிறதா?
• பொது நிகழ்வுகள் / அரசு விழாக்களில் வேட்பாளர்கள் பங்கேற்கின்றனரா?
• தேர்தல் விதிமுறைகளுக்கு அப்பால் புதியதாக நலத்திட்டங்கள் அறிவிக்கின்றனரா? செயல்படுத்துகின்றனரா?
• தேர்தல் பரப்புரைக்குத் தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களின் மைதானங்கள்/வளாகங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா?
• பிரியாணி, கம்மல், வேட்டி, சேலை போன்ற இலவசப் பொருட்கள் வழங்கப்படுகின்றனவா?
• அரசின் சாதனைகளை விளக்க அரசு நிதியைப் பயன்படுத்தி விளம்பரம் செய்யப்படுகிறதா?
• வேட்பாளர்களோ, கட்சியினரோ தங்களுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களைக் கட்டாயப்படுத்துகிறார்களா?மிரட்டுகிறார்களா?
மேற்கண்ட நெறிமுறைகள் மீறப்படுவதைக் கண்டறிந்தால் மாவட்ட வாரியாக தேர்தல் கண்காணிப்பு அதிகாரிக்குப் புகார் தெரிவிக்கலாம்.
மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலகம்
இலவசத் தொலைபேசி அழைப்பு எண் 1965
கட்டுப்பாட்டு அறை எண்கள்: 044-25675101 வடி 25675105
மின்னஞ்சல்:
மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இலவசத் தொலைபேசி எண்கள்
வ.எண் மாவட்டங்கள் இலவசத் தொலைபேசி எண்
1 சென்னை 1800425 2010
2 திருவள்ளூர் 1800425 7011
3 காஞ்சிபுரம் 1800425 7013
4 வேலூர் 1800425 7014
5 திருவண்ணாமலை 1800425 7015
6 விழுப்புரம் 1800425 7018
7 கடலூர் 1800425 7019
8 தர்மபுரி 1800425 7017
9 கிருஷ்ணகிரி 1800425 7016
10 சேலம் 1800425 7020
11 நாமக்கல் 1800425 7021
12 கோயமுத்தூர் 1800425 7024
13 ஈரோடு 1800425 7022
14 நீலகிரி 1800425 7025
15 திண்டுக்கல் 1800425 7026
16 தேனி 1800425 7028
17 மதுரை 1800425 7027
18 கரூர் 1800425 7029
19 பெரம்பலூர் 1800425 7031
20 அரியலூர் 18004257032
21 திருச்சி 18004257030
22 நாகப்பட்டிணம் 18004257034
23 திருவாரூர் 1800425 7035
24 தஞ்சாவூர் 1800425 7036
25 புதுக்கோட்டை 1800425 7033
26 சிவகங்கை 1800425 7037
27 இராமநாதபுரம் 1800425 7038
28 விருதுநகர் 1800425 7039
29 தூத்துக்குடி 1800425 7040
30 திருநெல்வேலி 1800425 7041
31 கன்னியாகுமரி 1800425 7042
32 திருப்பூர் 1800425 7023
- மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம், மதுரை-625 002