சென்ற வாரம் பகுத்தறிவில் எழுத்தில் சீர்திருத்தம் என்று ஒரு சிறு உபதலையங்கம் எழுதி இருந்ததில் இவ்வார முதல் கொண்டு நமது பத்திரிக்கை பழய பெயராகிய குடி அரசு என்னும் பெயராலேயே வெளியிடலாம் என்று கருதி அதில்

old tamil letters 1

 

 

என்கின்ற எழுத்துக்களை முறையே ணா றா னா ணை லை ளை னை என்று அச்சில் பிரசுரிக்கப்படும் என்பதாக எழுதி இருந்தோம். அந்தப் படிக்கே விஷயங்களை எழுத்துக் கோர்த்து இருந்தோம். எவ்வளவோ முயற்சி எடுத்தும் குடி அரசுக்கு இன்று வரை போஸ்டல் உத்திரவு கிடைக்காததால் சனிக்கிழமை இரவு வரை தந்தியை எதிர்பார்த்தும் கடைசியாக இவ்வாரம் பகுத்தறிவு என்னும் பெயராலேயே பிரசுரித்து அனுப்ப நேர்ந்தது. வாசகர்கள் விஷயத்தைப் படிக்கும்போது ணா றா னா என்கின்ற எழுத்துக்கள் வரும் போது அவற்றை

old tamil letters 2

 

 

என்ற உச்சரிப்புப் போலவும் ணை லை ளை னை என்கின்ற எழுத்துக்கள் வரும்போது

old tamil letters 3

 

 

என்ற உச்சரிப்புப் போலவும் உச்சரித்துக் கூட்டி வாசித்துக் கொள்ள வேண்டுமாய் கோறுகிறோம்.

இந்தப்படியே சில புஸ்தகங்களும் பிரசுரிக்க இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(பகுத்தறிவு அறிவிப்பு 06.01.1935)