ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பார்ப்பனரல்லாதார் வெற்றி!!

அதிகாரத்துக்கு வந்துவிட்டால் உள்ள பதவிகளை இரு கட்சியாரும் அனுபவிப்பார்களே ஒழிய ஒருவரும் வேண்டியதில்லை என்று சொல்லி விடமாட்டார்கள்!!!periyar anna veeramani at marriageஆனால் காங்கிரஸ் ஆதிக்கத்திற்கு வந்தால் பதவி உத்தியோகம் எல்லாம் பார்ப்பனர்களுக்கே போய் விடும். இதற்கு ஆதாரம் வேண்டுமானால் காங்கிரஸ் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில் (ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன்) உள்ள பதவிகளையும், உத்தியோகங்களையும் யார் அனுபவித்தார்கள் என்பதை உத்தியோக ஜாபிதாவை எடுத்துப் பாருங்கள். ஜஸ்டிஸ் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் பார்ப்பனரல்லாதார் பதவிக்கு வருவார்கள். உத்தியோகங்களும் கொஞ்சமாவது பார்ப்பனரல்லாத வாலிபர்களுக்குக் கிடைக்கும்.

பார்ப்பன சூழ்ச்சியில் பட்டால் அடியோடு பார்ப்பனரல்லாதார் சமூகமே பாழாய்ப் போய்விடும்.

(குடி அரசு பெட்டிச் செய்தி 24.03.1935)