மாலை நூத்தி ஐம்பது ரூபா
அறுபதே தேரல
ஜோப்பு,
கடுகு டப்பா,
எல்லாம் குடைந்த பின்னும்
கேட்டாச்சு பட்டவனிடமெல்லாம்
நாளைக்கு தரானுங்களாம்
நாரப் பயலுக
போன மாசம் முப்பது ரூபாதான் மால
தாயோளி பயப் புள்ள
நாளைக்கு செத்திருக்கலாம்
இல்லாட்டி
போன மாசமே போய் தொலஞ்சிருக்கலாம்
****
நகை,
பணம்,
பொருள்,
கொலையுண்ட பெண்ணின் உடல்
இப்படி எதுவும் இல்ல
கொலைக்கான காரணம்
ஒரு போணி சோறு
- இரா.எட்வின் (
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
நாளைக்கு செத்திருக்கலாம்
- விவரங்கள்
- இரா.எட்வின்
- பிரிவு: கவிதைகள்