
இதனால் சகலமானவர்களுக்கும்...

அநீதிகளின் குரலில்
நீங்கள் கத்துகிறீர்கள்
மலத்தைக் கழிப்பதைப் போல
ஜாதியை கழிக்காமல்
அதை மீண்டும் மீண்டும் உண்ணுகிறீர்கள்
உங்கள் வாயின் வார்த்தைகளில் நாறும்
மலத்தை நீங்கள் அறிந்தே இருக்கிறீர்கள்
சகல ஜாதிகளையும் சீடராக்குங்கள்
மறந்து போனது உங்களுக்கு
உங்கள் ஜாதியை மட்டும்
உள்ளே வைத்திருக்கிறீர்கள்
தெரிந்தே செய்யும் உங்கள் பாவத்தை
எங்கே கொட்டுவீர்கள்
ஜாதி மகிமையின் ரூபத்தை
சரியாகவே மிகச்சரியாகவே காட்டுகிறீர்கள்
நீங்கள்
வெள்ளை அங்கி அணிந்தாலென்ன
மஞ்சள் கட்டினால்தான் என்ன!