அன்பான குழந்தைகளே! வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?
சென்ற மாத ‘தலித் முரசு’ நூலில் ‘தளிர்’ பகுதி எப்படி இருந்தது?
நீங்கள் கடிதம் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தோம். யாரும் எழுதவில்லை.
எழுத நினைத்திருப்பீர்கள். ஆனால், எழுத முடிந்திருக்காது.
இப்போது தான் கடிதம் எழுதும் பழக்கமே போய்விட்டதே!
ஆனாலும், உங்கள் கருத்தினை அறிய விரும்புகிறோம். இந்த நூலை படித்து விட்டாவது எழுதுங்கள்.
தேர்வுகள் முடிந்திருக்கும். விடுமுறை தொடங்கிவிட்டது.
வெயிலில் அலைய வேண்டாம். நன்றாக விளையாடுங்கள்.
நிறைய புத்தகங்களைப் படியுங்கள். கதை கேளுங்கள், ஆடிப்பாடுங்கள்.
விடுமுறை உங்களுக்கானது.
இந்த நாட்களில் புதிதாக ஏதாவது ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்!
புதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள். அது நல்லது.
கீற்றில் தேட...
தலித் முரசு - ஏப்ரல் 2008
புதிதாய் ஒன்றை கற்றுக்கொள்ளுங்கள்
- விவரங்கள்
- தலித் முரசு ஆசிரியர் குழு
- பிரிவு: தலித் முரசு - ஏப்ரல் 2008