 |
கட்டுரை
நத்தை அகரம் அமுதா
தொழிலிலை எனினும் சுமைதூக்கி
தொடர்ந்து நகரும் சுமைதாங்கி
வழித்தடம் அமைக்கும் ஊர்ந்தபடி – அவ்
வழிவழி போகா துள்ளபடி
ஒட்டகம் போலொரு திமிலுண்டு
உள்அதன் படுக்கை அறையுண்டு
கொற்றவ னில்லை என்றாலும்
கோள எழில்மணி முடியுண்டு
கடந்து போகும் இடமெல்லாம் - பொதி
கழுதை போலே சுமந்துசெலும்
அடடா அதுதான் வீடாகும்
அதன்பேர் அதன்பேர் ஓடாகும்
கொட்டும் மழைவெயில் தாங்கும்படி
கூரை அமைத்த கொத்தனிது
பட்டுத் தெளியு(ம);முன் பட்டறிவால்
ஜம்புலன் அடக்கும் சித்தனிது
கொம்பொடு உடலை உள்வாங்கி
கொடுமையி லிருந்து தப்பிக்கும்
ஜம்புலன் அடக்கும் வித்தையினை
அதன்வழி ஊர்க்குக் கற்பிக்கும்
- அகரம் அமுதா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|