 |
கவிதை
பயணம் க.ஆனந்த்
நினைவூட்டியும்
நிறுத்தவில்லை
எனக்கான
நிறுத்தத்தில்
திசை குறித்த
என் உத்திரவுக்கு
எதிராக திரும்புவதே
வழக்கமானது
இறக்கி விடப்படுவதும்
இருந்தன
எனக்கு
இசைவில்லாத இடங்களாய்
எனக்கு
உடன்பாடில்லாத
இலக்கு நோக்கியதாகவே
பெரும்பாலான என்
பயணங்கள்
என்னுடையதாய்
வாகனம் மட்டும்
இருந்து என்ன செய்ய
ஓட்டுவது
யார் யாரோவாக
இருக்கையில்
- க.ஆனந்த் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|