 |
கவிதை
வழிபாடு
அறிவுநிதி
உதிர்ந்தும்
உலர்ந்தும் சரசரக்கும் இலையென
நீ
இல்லாத போதும்
இருப்பதாகவே காட்டிக்கொள்கிறேன்
வீட்டின் உட்பகுதியில்
சூனியத்தின் தழுவல்கள் நிறைந்து
ஆழ்ந்த நிசப்தத்தில்
வன்முறை அழைக்கிறது
இழுத்துவிடும் பெருமூச்சு
மீட்டுகின்றன உனக்கான அழைப்பொலியை
உன் இருக்கையில் அமர்ந்துகொள்கிறேன்
பகிர்வுகள் பற்றி மௌனம்
பேசிக்கொண்டே இருக்கிறது
குழந்தையின் அழுகையைப்போல
சாத்தியிருக்கும் சன்னலுக்கு வெளியே
மழையும் வந்து செல்கின்றன
என்னில் நிறைந்து
கண்ணில் வடிகிறாய்
ரகசியமாய் பூத்துக்கிடக்கிறேன்
ஒரு பூவாக
வாசல் திறந்தே கிடக்கிறது
பெரும் வரவாய் வந்துவிட்டுப் போ.
- அறிவுநிதி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|