 |
கவிதை
யாரும் அறியாத நாம்! அறிவுநிதி

உன்னை வரையும் பாக்கியம்
என் விரல்களில் காத்திருக்கின்றன.
என் உடலெங்கும்
நீயான ஓவியம்
ஓட்டப்பட்டள்ளது!
மௌனம்
உன் மொழியான போதும்
விழிகள் உரையாடிக்கொண்டே இருக்கிறது.
எனதான சொற்களை
உன்னில் நிரப்புகிறேன்.
நீ வெளிப்படுத்தாத புன்னகை - சில
ஸ்தம்பிப்புகளை திறந்துகொண்டு
என் இதழ்ஆரம் நிகழ்கிறது.
நீ வினோதங்கள் ஆகிறாய்,
நான் புன்னகையாகிறேன்
கண்முன் - ஒரு
பயணத்தை ஒப்படைக்கிறாய்.
அதைமேற்கொள்ள
பூக்களையும் பரிசளிக்கிறாய்
உன்னை தாங்கிக்கொள்ள
கரம் ஏந்துகிறேன்
நீ நழுவி
எனக்குள் விழுந்து கொண்டே இருக்கிறாய்
யாரும் அறியாத ரகசியமாய்!
- அறிவுநிதி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|