 |
கவிதை
சிகத்த இருட்டு துறையூரான் அஸாறுடீன்
எந்தன் சதிரத்தில் நெய் உருக்கும் - இந்த
வேண்டாத இரவுகளை
விரும்பியும் விரும்பாமலும் வரவேற்கிறேன்...
மலர்கள்.. மணங்கள் மற்றும்
பழங்கள் எனப் பல ரசங்களோடும்
கத்தி கறண்டி கைவிரல்கள்
இன்னும் பலவாய் ஆயுதங்கள்
அழகழகாய் இருந்திட்டும் - என்னை
கடித்துச்சப்பி கறுமுறென்ற
கோர உணர்ச்சிகளின் துவம்சத்தால் - என்
சதிரத்தில் வட்டமாயும் நீட்சியாயும்
குறுக்கு மறுக்காய்ப் பல கீறல்கள்
பரந்த வலைப்பின்னலதுவாய்...
தேகத்தைத் தேடிவரும்
வேண்டாத இந்த இரவுகள் - இனி
சிகப்பாய் இருட்டும்...
- துறையூரான் அஸாறுடீன், இலங்கை ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|