 |
கவிதை
மழைக்கொலை சந்தர் சுப்ரமணியன்
நடு நிசி வேளை,
கொக்கரிக்கும் தவளைகள்;
ஏதோ குடும்பத்தகராறு!
பெற்ற மகன் தற்கொலையால்,
ஒரு கிழட்டுத்தவளை
தலை குனிந்து நிற்கிறது;
சுற்றிக் குரல் கொடுத்து,
அக்கிழட்டு தவளையின் முகத்தில்
கரும்புள்ளி செம்புள்ளி குத்தி
காறி உமிழும் தவளைகள்!
"மழை வருமென்றதால்
ஒரு சிறுமிக்கு
என் தவளை மகனை
மணம் முடித்தது
மடத்தனம் தான்"-
மனசுக்குள் அழும் கிழட்டுத் தவளை!
தூரத்தில், கிராமத்துப்பக்கம்,
அந்தச் சிறுமியின் வீட்டில்,
சாங்கியங்கள் முடித்து,
ஒன்றும் அறியாது
படுத்துறங்கும் சிறுமி!
சுற்றிலும்
தடபுடலாய் விருந்துண்ணும்
ஊர் மக்கள்!
- சந்தர் சுப்ரமணியன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|