 |
கவிதை
கானலும் கண்ணீரும் செம்மதி
அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள்
போகும் இடம்
அவர்களுக்கே தெரியவில்லை
நடந்த பாதையில் சுவடுகள்
கேள்விக்குறிகளாய்க் கிடக்க
கச்சைகளைக் கழற்றி
மகுடமாக்கிச் சூட்டப்போகிறார்கள்
பயிர் வளர்க்கச் சென்றவர்கள்
வேலியைப் பிரித்துவிட்டு
பயிரையும் பிடுங்கி எறியப் போகிறார்கள்
உடம்பிற்குள் கெட்ட ஆவி புகுந்ததுபோல
ஆக்குரோசமாகப் பேசுகிறார்கள்
பயிரை எப்படி அழிக்கலாம் என்பதுபற்றி
உரமாகிப்போனவரின்
உணர்வுகளை மிதித்து
பகட்டையும் பணத்தையும்
தேடிப்போகிறார்கள்
நல்ல தீனி கிடைக்குமென்று
முட்டைக் கோழியாகப் போகிறார்கள்
இட்டுமுடிந்ததும்
இறைச்சிக் கோழியாவதற்கு
பல்லக்கில் செல்வதாய்
பாடையில் ஏறிவிட்டார்கள்
உயிர் உள்ள பிணங்களாகி
கானல் நீரில் நீச்சலடித்து
கண்ணீரில் மூழ்கடிக்கப்போகிறார்கள்
- செம்மதி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|