 |
கவிதை
தோற்றுப்போவதற்காகவே
கோகுலன்
வயிறுமுட்டக் குடித்துவிட்டு
சாலையோரம் விழுந்து கிடக்கிறாய் நீ
இன்று உன் சம்பள நாளாய் இருக்கக்கூடும்
இல்லையுன் வாடிக்கையாயும் இருக்கக்கூடும்
நீ விழுந்து கிடப்பாய் எனத்தெரிந்தும்
நிறைவேறாத ஆசைகளின் ஏக்கங்களுடன்
முட்டாள்த்தனமாய் வாசல் பார்த்து
காத்திருப்பாள் உன் மனைவி
இன்றாவது அப்பாவுடன்
சேர்ந்து சாப்பிடலாம் என
காத்திருக்கும் மகனைப்பற்றியோ
முதல் மதிப்பெண் அட்டையுடன்
கையெழுத்திற்காக காத்திருக்கும் மகளைப்பற்றியோ
உனக்கென்ன அக்கறை இருக்கக்கூடும்?
வழமை போலவே
இந்த உறக்கத்தின் முடிவிலும்
மீண்டும் ஒரு ஞானோதயம் தோன்றலாம்
நாளை மாலை உன் தேடுதலில்
மீண்டும் தோற்றுப்போவதற்காகவே!
- கோகுலன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|