 |
கவிதை
நானும் காதலும் - 2
கோகுலன்
குளிர் காலையின்
மஞ்சள் வானத்தினூடாக எழும்பி நிற்கும்
உன் தேசம் கடந்துவந்த சூரியன்,
மலைச்சரிவின் எங்கும் பரவவிடுகிறது
இதம் நிறைந்த உன் நேசத்தின் வெம்மைகளை..
இரவெல்லாம் பொழிந்த
என் பிரியம் தாங்கிய பனித்துளிகள்
உருகிச் சொட்டுகின்றன இப்பொழுதில்!
பூக்களுடன் செழித்திருக்கும்
இப்பெருவெளியின் புல்வெளியினூடே
முட்டிகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்தபடி
உன்னை நினைத்திருக்கிறேன்
எதிரே தெரியும் மலைப்பாதையில்
தரையிறங்கும் ஆட்டுமந்தையாய்
மென்மையாய் வழிகிறது உன் பாடல்!
நட்புடன்,
- கோகுலன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|