 |
கவிதை
இன்று வேறு நாள்! இப்னு ஹம்துன்
நேற்றைப்போலில்லை!
கணப்பொழுதில் நீண்டுவிட்டது
வெயிலின் கொடு நாவு
வெளியெங்கும்
பரவியிருக்கும் வெறுமை
முகத்திலறையும் பூதம்!
இரத்தம் வெளிறி
உறைந்துக் கிடக்கின்றன
இரவு பகல்கள்
பொருள் பிரிக்க..
சக்தி இழக்கிறது வாழ்க்கை!
காலடித்தடங்களில்
ஞாபகத்துணுக்குகள்
சிந்தியபடி மனம்.
நீ ஊருக்குப் போயிருக்கிறாய்!
- இப்னு ஹம்துன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|