 |
கவிதை
உறவை மறந்த சிறகுகள் இப்னு ஹம்துன்
கரன்சிக் காட்டிற்கு
கண்கட்டிக்
கொண்டுவரப்பட்ட
இன்றைய மங்கை நான்.
இங்கே
பக்கவாட்டுச் சிறகுகள்
பாதச்சக்கரங்கள்
எல்லாம் முளைத்தன
யாரும் கேட்காமலேயே!
பிறப்பில்வந்த கரங்களை விடவும்
பொருத்தப்பட்ட சிறகுகளில்
பெருமிதம் அடைகிறேன்.
'பழம் பாதங்களை விடவும்
பயனுடையவை இப்புதிய சக்கரங்கள்'.
கற்பிதங்களில்
காண்கிறேன் அற்புதங்கள்.
இருந்தும்...
தொடரோட்டத்தில்
துரத்திப்பிடிக்க..
உயிரில்லா உயர்வாக
பணமென்னும் பட்டாம்பூச்சி
அதனோடு
தினம்தினம் கண்ணாமூச்சி.
நாளைய வானின்
நூல் பட்டங்களுக்காக
காகித அட்டைகளுக்கு
வர்ணம் தீற்றுகிறேன்.
பள்ளிப் புத்தகத்தில்
புதையுண்ட நினைவாக
பழைய மயிலிறகு.
வானில் பறக்க
விரைகிற அவசரத்தில்
தூளிக்குழந்தைக்கான
தருணங்கள் அமையாமல்
தேங்கிப்போகுதென் தாய்ப்பால்.
- இப்னு ஹம்துன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|