 |
கட்டுரை
மண் வாச(க)ம் இப்னு ஹம்துன்
காலங் காலமாய் அது-
காதலைப் போலிருக்கிறது.
ஆதாரமாக!
சோற்றில் மண்ணைப் போடுபவனும்
சில பொழுது
மனம் திறப்பதுண்டு:
"மண் தான் சோறு போடுகிறது".
நிறையவே இருக்கின்றன
நறுமணத் திரவியங்கள்.
மனம் பூசிக்கொள்வதோ
மண் வாசனையைத் தான்.
மலர்ப்புன்னகை மர்மத்துடன்
மரம்
மவுனமாய் தலையாட்டிநிற்க..
மனிதன் சொல்லிக்கொள்கிறான்
'மண்ணின் மைந்தன் நான்!'
இருந்தும்........
'மண்ணாய்ப் போ...'வதை
வசவாகத் தான்
வைத்திருக்கிறான்.
- இப்னு ஹம்துன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|