 |
கட்டுரை
நகையே! இப்னு ஹம்துன்
அக்கா வரும் போதெல்லாம்
நடக்க வேண்டியிருக்கிறது
அடகுக் கடைக்கு.
தங்கச்சிக்காகவும் இனி
தனியாக வாங்கிச் சேர்க்கணும்.
கல்லூரிக்கனவில்
மூழ்கியிருக்கும் தம்பிக்கு
அம்மாவின் தாலிக்கொடி
இன்னமும் மீட்கப்படவில்லை
அண்ணனின் பயணத்திற்கு வைத்த
அண்ணியின் வளையல்களும்
அவளுடைய வாழ்க்கையும்!
அணிவதற்கன்று;
அவசரத்திற்கென்று
ஆகிவிட்ட உனக்கு
நல்ல பெயர் தான்
நகையே!
- இப்னு ஹம்துன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|