 |
கட்டுரை
முட்களும் பூக்களும்! இப்னு ஹம்துன்
முத்தங்கள் வழியும் பால்யம்
முடிவுக்கு வர
நிராகரிப்பின் முட்களோடு
நீளும் உனது கரம்
வருத்தங் கசிய வைப்பதில்லை
ஒருபோதும்!
உனது மவுனம்
உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறது
சங்கடம் என்றொரு அர்த்தமும்
சம்மதம் தனக்கென்று!
நடக்கப் பழகிவிட்டப் பின்னர்
நான் அறிந்தே வைத்திருக்கிறேன்
நாளை
என் பருவத்தின் பாதையில்
மறுபடி துளிர்க்கும்
உனது கரத்தில்
இருக்கலாம்
எனக்கான பூங்கொத்துகள்!
- இப்னு ஹம்துன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|