 |
கட்டுரை
வீதியில் அலையும் கனவுகள் இப்னு ஹம்துன்
வீதியில் அலையும்
கனவெதையும்
வேடிக்கைப் பார்த்ததுண்டா?
வேகம் மின்னவும்...
வேதனைச் சொட்டவும்....
தாகம் பருகவும்...
தாபம் உண்ணவும்....
பளபளக்கும் அந்தப் பார்வையில்
நாளையை உடுத்தும் ஆர்வம்.
புதிய திசைகளை
பிரசவிக்கத்துடிக்கும்
அந்தப் பாதங்களில்
விலக்கப்பட்ட தீப்பொறி.
யுகம் சமைக்கும் சில.
சுயம் எரிக்கும் சில.
வழிமறித்து அவற்றை
விசாரித்துப் பார்த்தால்
ஒருவேளை கிடைக்கலாம்
நம் பழைய விலாசங்கள்.
- இப்னு ஹம்துன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|