 |
கட்டுரை
கண்ணீர்த் திரவியங்கள் இப்னு ஹம்துன்
பின்னோக்கிப் பயணிக்கின்றன
நினைவுகள்
கையில் விமானச்சீட்டு.
சொந்த ஊரில்
விளைச்சல் காண
எந்த ஊரிலோ ஏரோட்டம்.
கடல் தாண்டியும்
மணக்கின்றன
வியர்வைப்பூக்கள்
புலப்படுவதேயில்லை
பூக்களின் கண்ணீர்
நறுமணத் திரவியங்களில்!
இறந்த காலத்தில்
உயிர் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றன
எதிர்காலத்துக்கான சில தவங்கள்!
புலம் பெயர்ந்த வாழ்வில்
பிரிந்து கிடக்கும் தம்பதிகளாய்..
பொருளின் அர்த்தங்கள்.
- இப்னு ஹம்துன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|