 |
கவிதை
இருளின் துயரம் கா. ஆனந்தகுமார்
மனத்துள் வழியும் புழுக்கமாய்
படியத் துவங்குகிறது இருள்.....!
மனிதர் விலங்கெனப் பேதமற்று
மறுதலித்த உணர்வுகளில் ஊர்ந்து
மௌனத்தின் அதிர்வுகளால்
எவருக்குமற்ற பொழுதாக்கி நெய்யப்பட்ட
போர்வையென எங்கும் நீள்கிறது..
உணர்வற்ற உடல் கொண்டு
உயிர்வாழும் பரத்தையைப் போல்
கண்டுணரவியலா நிகழ்வுகளைப் புணர்ந்தபடி
காலத்தின் விரிவில்,
கழிவிரக்கமேதுமின்றி கேவியபடி
உறைகிறது இருள்.!
இருளின் துயரம்
எவரும் அறியாதது அதன்
வண்ணத்தைப் போலவே .....!!
- கா. ஆனந்தகுமார் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|