 |
கட்டுரை
பிடிவாதங்கள் கவிமதி
பிச்சை பாத்திரத்திற்கு
ஏங்குமென்கிறபோது
அட்சயப்பாத்திரங்கள்
அருகருகே
அடுக்கப்பட்டிருந்தும்
திரைவிலகும்
திசையிற்கழியும்
கத்தை கத்தையான
காலம்
அந்திமக்குமரிகள்
கூடியடிக்கும்
கும்மிகளுக்கிடையில்
சிதறித் தெறிக்கும்
காற்று பிசிரென
கணபொழுதுளில்
சறுக்கித்தான் போகிறதெம்
உச்சவரம்பின்
பிடிவாதங்கள்
- கவிமதி, துபாய் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|