 |
கட்டுரை
ஒரு பேச்சுக்கு சொல்வதெனில் கவிமதி
நடிகைகள்
பற்றியெனும்போது
நாறத்தான் செய்கின்றன
நாற்சந்தி
கழிவுகளாகிவிட்ட
செய்திகள்
அந்தகாலத்து நடிகைகளில்
எம்மினத்திற்கு
அம்மாவாய்
தங்கையாய்
தாரமாய்
ஒப்பீடுகாட்ட
ஒன்றிரண்டாவது
இருந்ததுண்மை
நாகரீகமென்ற பெயரில்
எலும்புகளற்று உழன்றுவிடும்
நாவுகளால்
இக்கால
அரிதார கழிவுகளை
எம்பெண்களுடன்
ஒப்பிடுவதற்குபதில்
வருத்தம்தான்
மிஞ்சுகிறது மனதில்
- கவிமதி, துபாய் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|