 |
கட்டுரை
அடிமைகளின் காலம் கவிமதி
இந்நேரத்திற்கு உலகில்
எத்தனையோபேர் தலையில்
இறங்கியிருக்கக்கூடும்
ஏவுகணைகள்
இரக்கமின்றி
பிய்த்து எறியப்பட்டிருக்கும்
இராக்கியர்களின் இதயங்கள்
கருவறுக்கப்பட்டிருக்கும்
காசாவின் கனவுலகம்
குலை குலையாய்
குதறியிருக்ககூடும்
ஈழத்தில் ஈரல்கள்
இன்னும் அநியாயங்கள் அனைத்திலும்
உன்கையே இருக்குமென்பது அறிந்தே
வெறுக்கும் ஒருகூட்டம் விலகியிருக்கும்
உன் நாட்களை கொண்டாடாமல்
அதற்காகவெல்லாம் கவலைப்படாதே
அடுத்தவன் தலையில் குண்டை போட்டுவிட்டு
நீ சொல்லும் ஆப்பி நீயு இயர்களை
அணுகூடபிசகாமல்
ஆண்டுதோறும் கொண்டாடுவர்
உன் பிள்ளைகள்
- கவிமதி, துபாய் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|