 |
கவிதை
நாய்கள் பற்றிய கவிதைகள்
கவிதா குமார்
குறைக்கும் நாய்கள்
பற்களைப் பற்றி
கவலைப்படாமல்
வால்களைப்பற்றி
கவலைப்படுகின்றன.
வால்கள் இல்லாத
நாய்கள் உண்டு.
பற்கள் இல்லாத
நாய்கள்இல்லை
என்ற நினைப்பை
உறுதி செய்துகொண்டேயிருக்கிறது
என் காலில் தெரியும்
நாயின் பற்குறி.
கவிதை-2
--------------
பேருந்து நிலையத்தில்
காத்திருக்கும்
விபச்சாரப்பெண்ணைப்பற்றி
கவலைப்படாமல்
புணர்ந்து கொண்டிருக்கின்றன
நாய்கள்.
கவிதை-3
----------------
குரைப்புகளின்றி
தெரிந்து கொள்ளலாம்
வீடுகளுக்குள்
நாய்கள் இருப்பதை.
- ப.கவிதா குமார் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|