 |
கவிதை
பாரு பாரு பயாஸ்கோப் படத்தை பாரு !
ப.கவிதா குமார்
பாருபாரு பயாஸ்கோப்பு படத்தை பாரு
ஊருபூரா இருட்டுப்பாரு
உருட்டி மிரட்டும் கூட்டம் பாரு-அந்த
திருட்டுக்கூட்டப் பயலுகளுக்கு
தீபாராதனை மரியாதை பாரு
பாஸ்மார்க் வாங்காத
பள்ளிக்கூட பையனப்பாரு
அவன் பையில் டாஸ்மாக் சரக்கு பாரு
ஊத்திக்கொடுக்கும் உத்தியோகம் பாரு
அதற்கு ஒழுங்கா டிகிரி படிக்கப் பாரு
கல்வி விற்கும் வியாபாரி பாரு
சாராயம் விற்கும் அரசு பாரு-அதில்
நிதி சேர்க்கும் பெருமை பாரு
வீதிபூரா நாத்தம் பாரு-அதைகூட்டி
பெருக்கும் கூட்டம் பாரு
ஒதுக்கி வைக்க சேரிபாரு
அதற்கு காலனியின்னு பெயரு பாரு
ஒத்தலைட்டு குடிசை பாரு
அதில் ஓட்டையில் தெரியும் வெளிச்சம் பாரு
வானத்திலே நிலா பாரு- அதை
குடிசை வீட்டு தட்டில் பாரு
கலர் கலரா ரேசன்கார்டு பாரு
அதில் சில மட்டும் செல்லும் பாரு
தண்டவாளத்தில் ரயில பாரு
அதில் பெட்டி நிறைய அரிசி பாரு
தங்கம் போல கடத்துறான் பாரு
சுங்கம் வைத்தாலும் பிடிக்கல பாரு
விவசாயம் கெட்டபூமி பாரு-அதற்காக
வேலை கொடுக்கும் திட்டம் பாரு
அறிவிச்சக்கூலி மறுக்கும் பாரு
தட்டிக்கேட்ட அடிக்கும் பாரு
இரக்கமில்லாமல் சுட்டதும் பாரு
ஜேசிபி மிஷினப்போல
ஏழைகளிடம் சுரண்டும் பாரு
மேடையில முழக்கம் பாரு-அது
விளம்பரங்களில் ஜொலிக்கும் பாரு
எல்லாம் கிடக்கட்டும்
இலவச டிவி பாரு-அதில்
மானும், மயிலும் ஆடுவதைப்பாரு
வருத்தமெல்லாம் போகுமா பாரு
அதில் பிரச்சனைகள் தீருமா பாரு
பாருபாரு பயாஸ்கோப் படத்தை பாரு !
- ப.கவிதா குமார் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|