 |
கவிதை
தூரத்திடிமுழக்கம்…! கிறுக்கன்
பிளிருகின்ற சத்தம் கேட்டால்
மதம் பிடித்த களிறொன்று
உலா வருவதுபோல்….
எலும்பு கூடாகிவிட்ட
சிலந்தி ஒன்று…
அன்று நெய்த ஒட்டடை
உலர்த்தி…
தன் முகம் மறைத்து…
ஒலிப்பான் வைத்து
பிளிறி கொண்டிருக்கிறது…
அய்யகோ!
கருநிற யானைக்கு
வெள்ளையடித்து!
வாகனத்திலேற்றி…
ஊர்வலமாய்
தேர்வலம்
கேவலமாய் அரங்கேறி
கொண்டிருந்தது!
தன் தும்பிக்கையால்
என் நம்பிக்கையை
தூக்கி கால் கீழே
நசுக்கி விட்டு
எனை தாண்டி சென்று
கொண்டிருந்தது
பிளிருகின்ற அலறல்
சப்தம்…!
நான் மௌனம் எனும்
ஜனநாயகத்தில்
யானையை மிதிக்க
பயின்று கொண்டிருக்கிறேன்…
- கிறுக்கன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|