 |
கவிதை
நட்பின் பிறழ்வு க செ வெங்கடேசன்
நான் எழுதிய கவிதையின்
பிரசுரத்தை மீண்டும் படிக்கையில்
உறுத்தலாய் மனது!
உன் அந்தரங்கத்தை
ஜன்னலினூடே
திருடிய நிலவொளியாய்!
என்னுடனான, உன் இளமைக்கால
தனி மனித பகர்வை
அனுமதி இன்றி
அரங்கேற்றியதில்!.
- க செ வெங்கடேசன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|