 |
கவிதை
மழைக் குறிப்புகள் குட்டி செல்வன்
கேட்பாரற்று
எங்கோ கசியும் பாணனின் இசை
அலையாய் வருடிச் செல்கின்றது மனதை
நேற்று வந்த பட்டாம்பூச்சியை
எதிர்பார்த்திருக்கின்றேன்
குழந்தைகளின் நம்பிக்கையோடு
இங்கு நிகழ்பவை எல்லாம்
ஏதோ ஒரு தேவையை
மையப்படுத்தியே நிகழ்கின்றன
என்பதைப் புரிந்துகொள்வதற்குள்
என்னை விட்டு வெகுதூரத்தில் நீ
என் தனிமையின் பக்கங்களில்
இம்மழைப் பயணங்கள் எழுதுகின்ற
பாவனைகள் நன்றாகதான் இருக்கின்றன
உடலை குளிர்த்துச் சிலிர்ப்பூட்டி
மனதை சற்று இலகுவாக்கி
ஒருவித வரையறையற்ற மென்மையாக
சிறுவயதில் இருந்ததைவிட
மழை இன்று நல்ல சினேகிதமாகியிருக்கின்றது
உன்னையும்விட
உன் அலட்சியங்களால்
என்னுளேயே மெளனமான உணர்வுகளும்
இம்மழைப் போன்றதே
இடையூறுகளின்றி
தொடர்ந்து பொழியும் மழையானது
என்றேனும் பெரும் வெள்ளமாய் உருவாகிச்
சிதைக்கக்கூடும் அனைத்தையும்
எவ்விதப் பாகுபாடுகளுமின்றி
- குட்டி செல்வன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|