 |
கட்டுரை
ஞாயிற்றுக்கிழமைச் சந்தை மாலதி மைத்ரி
உள்ளாடை வெளியாடை
உடம்புக்கும் வீட்டுக்கும்
உபயோக மற்றும் அலங்காரப் பொருட்கள்
செல்போன் லேப்டாப்
வாகன உதிரிப்பாகங்கள்
மருத்துவ உபகரணங்கள்
புத்தகங்கள்...
பழைய புதிய
ஏற்றுமதி இறக்குமதி என
சகலவிதமும் நடைபாதையில்
முன்பு ஒருமுறை சக்கர நாற்காலிகளைக்கூட
பழைய பொருட்கள் கடையில்
விற்பதைப் பார்த்தேன்
சமீபகாலமாக நிறைய இடங்களில் காணமுடிகிறது
உடல் தலையற்ற பெரிய பெரிய
பொம்மைக் கால்களையும் கைகளையும்
முழுதாய்க் கிடைத்தால் எனக்கும் ஒன்று
விளையாட வாங்கித் தருகிறாயா என்கிறாள்
என் மகள்
ஏதேனும் ஒரு திசையில்
குண்டுகள் வெடிக்கும்போதெல்லாம்
என் உடம்பின் ஏதோவொரு பாகம்
ஊனமடைகிறது.
- மாலதி மைத்ரி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|