 |
கவிதை
விலகியே இருக்கும் மகன்
முத்துசிவக்குமரன்
தாய் மொழி ஒன்றாம்
தங்கும் ஊரும் ஒன்றாம்
தம்ளர் மட்டுமே ரெட்டை
ஊன்றுகோலை ஊன்றும்போதெல்லாம்
நினைவுக்கு வருகின்றது,
விலகியே இருக்கும்
மகனின் தோள்கள்...
ஒரு மணி நேர கோஷம்
ஒதுங்கியது ஐம்பது ரூபாய்
ஒதுக்கப்பட்டது அடிப்படை உரிமை
கறுப்பரை முன்னிறுத்தி
களங்கம் போக்க முயலும்
கறை போகா நாடு
பூத்துக் குலுங்குகின்றன
மலர்கள்
மயானத்தில்
ஆசையுடன் கேட்டாள் புத்தாடை, பட்டாசு
அணுகுண்டாய் வெடித்தார் அப்பா
ஆறு மாதமாய் மூடப்பட்டிருக்கும் ஆலை
- முத்துசிவக்குமரன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|